தற்போதைய காலங்களில் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை மிக குறைவு. அரசு பணிகளில் கூட 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்பவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் 60 வயதுக்கு பிறகு அதிகமான மருத்துவ செலவு, வாழ்க்கை செலவுகளை சந்திக்கும் மூத்த குடிமக்கள் பலர் உள்ளனர்.
மருத்துவச்செலவுகள்: இவர்களுக்கு வருவாய் இல்லாததால் வங்கிகளில் கடன் வாங்கி தங்கள் செலவுகளை எதிர்கொள்ள முடியாது. நிரந்த வருவாய் இருப்பவர்கள் மட்டுமே தனிநபர் கடன், மருத்துவ கடன், வீட்டுக்கடன் போன்றவை பெற முடியும். இதனால் பெரிய அளவில் மூத்த குடிமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
கைகொடுக்கும் சொந்த வீடு: இதற்கு ஒரு தீர்வாக கடந்த 2008-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் மறு அடமான கடன் திட்டம். ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் (reverse mortgage scheme) என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று முதியவர்கள் தங்களது செலவுகளை எதிர்கொள்ள முடியும். இதற்கு ஒரே முக்கிய நிபந்தனை இந்த திட்டத்தின் கீழ் கடன் கோரும் நபருக்கு எந்த சர்ச்சையும் இல்லாத வகையில் சொந்த வீடு இருக்க வேண்டும்.
மறு அடமானக் கடன்: பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஈட்டிய பொருளின் பெரும் பகுதியை சொந்த வீடு வாங்குவதில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் முதியவர்களாக ஆன பிறகு வருவாய் இல்லாத சூழலில் தங்கள் வசம் உள்ள வீட்டை வைத்து கடன் பெறுவதே இந்ததிட்டம். வருவாய் குறைவாக இருக்கும் மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் இருக்கும் கடன் திட்டம் தான் மறு அடமான கடன் திட்டம்.
» 60-வது பிறந்த நாளில் ரூ.60 ஆயிரம் கோடி அதானி நன்கொடை: அறக்கட்டளை மூலம் சேவை பணி
» செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க சிறந்த வழி ‘தங்கப் பத்திரம்’... எப்படி?
அதாவது வீட்டுக்கடனை ரிவர்ஸில் பெறுவது. வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியதற்கு பதிலாக வீட்டை காட்டி கடன் பெறலாம். வீடு வாங்க மாதா மாதம் நாம் கடன் செலுத்திய காலம் போய், வீடு நமக்காக ஒவ்வொரு மாதமும் பணம் தருவது தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் அல்லது மறு அடமானக் கடன்.
தகுதி என்ன?: 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற முடியும். அவரது பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். அந்த வீடு கடன் கோரும் தகுதி நிலைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். தம்பதியரில் இருவரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியுடையவர் ஆவார்.
தவணை தேவையில்லை: இவ்வகை கடன் திட்டத்தில் தங்களுடைய வீட்டின் மதிப்பீடு செய்து வங்கிகள் தரக் கூடிய தொகையை மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெற முடியும். இந்த கடன் தொகையை மற்ற வீட்டுக்கடன் போல மாத மாதம் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணையாக அடைக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாங்கும் தொகையை வேண்டுமானால் மாதா மாதம் என தவணையாக பெற்றுக் கொள்ள முடியும். வீட்டை விற்பனை செய்யும்போது கடன் தொகையை கழித்துக் கொள்ளலாம். அதாவது வீட்டுக்கடனில் மொத்தமாக தொகையை பெற்றுக் கொண்டு மாதா மாதம் வட்டியுடன் தவணையை செலுத்த வேண்டும். இந்த மறு அடமானக் கடனில் மாதம் தோறும் ஒரு தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம். அடைக்கும்போது மொத்தமாக பிறகு அடைக்கலாம் அல்லது வீட்டை விற்று கடனை அடைத்துக் கொள்ளலாம்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago