வறட்சியால் காபி உற்பத்தி பாதிப்பு

By ராய்ட்டர்ஸ்

நடப்பாண்டில் காபி உற்பத்தி குறை யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பருவ மழை குறைவு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக காபி உற் பத்தி குறைந்துள்ளது. இந்த நிலை யில் நடப்பு பருவத்தின் காலாண்டில், பூக்கும் பருவத்தில் குறைவான மழை பொழிவு மற்றும் அதிக வெப்பம் காரணமாக காபி உற்பத்தி கடந்த 20 ஆண்டுகளைவிடவும் மிகவும் குறைவான உற்பத்தியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்த துறையைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

உலக அளவிலான காபி உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. பிரேசில் மற் றும் வியட்நாம் போன்ற நாடு கள் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி குறைந் தாலும், அதிக உற்பத்தி செய்யும் பிரேசிலை விட சர்வதேச அளவில் காபி விலையை தீர்மானிப்பதில் முக்கிய இடத்தில் உள்ளது.

பூக்கும் பருவத்தில் நிலவும் வறட்சியான பருவ நிலை காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான உற்பத்தி குறைவு அளவிலிருந்து 25 சதவீதம்வரை மேலும் உற்பத்தி பாதிக்கும் என எதிர்பார்ப்பதாக கர்நாடக தோட்ட கூட்டமைப்பு தலைவர் பி.எஸ். பேடி தெரிவித்துள்ளார்.

இந்திய அளவிலான காபி உற்பத் தியில் கர்நாடகம் 70 சதவீதம் உற்பத்தி செய்கிறது. நடப்பு பருவ காலம் செப்டம்பர் இறுதியில் முடிவடைகிறது. இந்த பருவத்தில் 3,50,000 டன் காபி உற்பத்தி இருக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய காபி வாரியம் மதிப்பிட்டுள்ளது. கர்நாடகத்தில் 2016-17 பருவத்தில் 25 சதவீதம்வரை உற்பத்தி குறைந்து 2,63,000 டன்னாக இருக்கும் என்றும், 1998-99 க்கு பிறகு இது மிகக் குறைந்த உற்பத்தி அளவு என்றும் காபி வாரியம் குறிப்பிட்டுள்ளது.

2016-17 பருவ காலத்தின் முதல் உற்பத்தி ஜூன் மாதத்தின் மத்தியில் இருக்கும் என்று காபி வாரியம் கணித்துள்ளதாக வாரியத்தின் விவசாய பொருளாதார அறிஞர் டி. ஆர். பாபு ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்