சென்னை: தங்கம் விலை இன்றும் சரிவு கண்டுள்ளது. பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று கடும் சரிவு கண்டுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் தங்கத்தில் இருந்த முதலீடுகள் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்றும் கடும் சரிவு கண்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ.4,715-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,912-க்கு விற்பனையாகிறது.
» காஷ்மீரில் வங்கி மேலாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக் கொலை
» 'அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை' - சென்னையின் முக்கிய இடங்களில் ஆதரவாளர்கள் போஸ்டர்
வெள்ளி விலை
வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.66,000 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago