புதுடெல்லி: இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரித்துள்ளது. 6.60 லட்சம் டன் பாமயிலை இந்தியா மே மாதம் இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரல் மாத இறக்குமதியைவிட 15 சதவீதம் அதிகம்.
பாமாயில் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தோனேஷியா முதன்மை நாடாக உள்ளது. ஆனால், உள்நாட்டு விலை உயர்வால் கடந்த ஏப்ரல் மாதம் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை விதித்தது.
இந்நிலையில் மலேசியா, தாய்லாந்து, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா பாமாயில் இறக்குமதியை அதிகரித்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் மே மாதம் 1.23 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ஏப்ரலில் அதன் இறக்குமதி 67,788 டன்னாக இருந்தது. சோயா எண்ணெய் இறக்குமதி ஏப்ரலில் 3.15 லட்சம் டன்னாக இருந்தது. மே மாதம் அதன் இறக்குமதி 3.52 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு வரிச் சலுகை அறிவித்துள்ள நிலையில் வரும் மாதங்களில் அதன் இறக்குமதி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோயா எண்ணெயை அர்ஜென்டைனா மற்றும் பிரேசிலில் இருந்தும் சூரியகாந்தி எண்ணெயை ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
45 mins ago
வணிகம்
4 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago