பங்குச் சந்தையில் 1,041 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான நேற்று எழுச்சி காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 1,041 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 55,925 புள்ளிகளாக உயர்ந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் 308 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 16,661 புள்ளிகளைத் தொட்டது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் அறிவிப்புகள் காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மும்பை பங்குச் சந்தையில் காலையிலிருந்தே ஏறுமுகம் காணப்பட்டது. பெரும்பாலும் அனைத்து நிறுவன பங்குகளும் ஏற்றம் பெற்றன. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவன பங்குகள், பொதுத்துறை நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன. டைட்டன், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அதானி துறைமுகம், இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் அதிகபட்சமாக 4.96 சதவீதம் வரை உயர்ந்தன.

கோடக் மஹிந்திரா வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், ஐடிசி உளஅளிட்ட நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக 2.2 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 3,615 பங்குகளில் 2,368 நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன. 1,091 நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. 156 நிறுவன பங்குகள் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தகமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்