புதுடெல்லி: வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்படுகிறது.
செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன. இந்தநிலையில் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது இது கடந்த 2019-20ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டது. பின்னர் கரோனா காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனியார் கார்கள் 1000 சிசி வரை ஆண்டு ப்ரீமியம் தொகை ரூ22 அதிகரி்த்து ரூ.2,094 ஆக உயர்ந்துள்ளது. 1000 முதல் 1500 சிசி வரை வாகனங்களுக்கு ரூ.195 அதிகரி்த்து, ரூ.3,416 ஆக உயர்கிறது.
1550 சிசி திறனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம், ரூ.7,897 ஆக, ரூ.7 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை 75 சிசிக்கு குறைவான வாகனங்களுக்கு ப்ரீமியம் தொகை ரூ.538ஆகவும், 75 முதல் 150 சிசி திறனுடைய வாகனங்களுக்கு ப்ரீமியம் ரூ.714 ஆகவும், 150 முதல் 300 சிசிவரை ரூ.1,366 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
350 சிசிக்கு அதிகமான திறனுள்ள வாகனங்களுக்கு ரூ.2,804 கட்டணம் உயர்கிறது.
சரக்கு வாகனங்களில் 12டன்னுக்கு அதிகமாக 20 டன்னுக்குள் சுமை தூக்கும் இருக்கும் வாகனங்களுக்கு ப்ரீமியம் ரூ.33,414 லிருந்து ரூ.35,313 ஆக அதிகரிக்கிறது.
40 டன்னுக்கு மேல் இழுக்கும் கனரக வாகனங்களுக்கான ப்ரிமியம் முன்பு ரூ.41,561ஆக இருந்தது, இனிமேல் ரூ.44,242 ஆக அதிகரிக்கும்.
பேட்டரி வாகனங்களுக்கான அடிப்படை காப்பீடு ப்ரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கார்களுக்கு 30 கிலோவாட் வரை உள்ள வாகனங்களுக்கு ரூ.1,780 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 65 கிலோவாட் உள்ள கார்களுக்கு ரூ.2,904 ஆகவும், புதிய கார்களுக்கு 65 கிலோவாட்களுக்கு அதிகமான கார்களுக்கு ரூ.6,712 ஆகவும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago