பெங்களுரூ: விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மாம்பழம் விற்பனை செய்யும் திட்டத்தினை அஞ்சல் துறை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தின் மாம்பழம் வளர்ச்சி மற்றும் விற்பனை நிறுவனத்துடன் இணைந்து அஞ்சல் துறை "கர்சிரி மேங்கோ ப்ராஜெக்ட்" (Karsiri Mangoes project) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி, மாநிலத்தில் உள்ள மாம்பழ விவசாயிகள், தாங்கள் விளைவித்த மாம்பழங்களை 3 கிலோ அளவில் அட்டை பெட்டிகளில் அடைத்து பொது அஞ்சலகத்தில் உள்ள விரைவு அஞ்சல் பிரிவுக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கிருந்து அஞ்சல் ஊழியர்கள் மாம்பழ பெட்டிகளை உரிய வாடிக்கையாளர் முகவரிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், இடைத்தரதர்களின் தலையீடு இன்றி அவர்களுடை விளைச்சளுக்கு உரிய நல்ல விலையைப் பெறுகிறார்கள். அதே போல வாடிக்கையாளர்களும், ரசாயனம் தெளிக்கப்பட்டாத நல்ல தோட்டத்து மாம்பழங்களை நேரடியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள முடிகிறது.
» 3200+ விதிமீறல் புகார்கள்: ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
» வைப்பு நிதி மீதான இரு வகை வங்கிக் கடன்கள் - ஓர் எளிமையான புரிதல்
மாம்பழ விவசாயிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் கரோனா பொது முடக்க காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரில் உள்ள வாடிக்கையாளர்கள் பல்வேறு ரக மாம்பழங்களை http://karsirimangoes.karnataka.gov.in இணைய தளத்தில் ஆர்டர் செய்வதன் மூலமாக அதே நாளில் அல்லது அடுத்த நாளில் பெற்றுக்கொள்ள முடியும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago