பெங்களூரு: கடந்த 7 மாதங்களில் 60 லட்சம் பயனர்களுக்கு மேலான எண்ணிக்கையை 'Flipkart Pay Later' ஆப்ஷன் கடந்துள்ளதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று ஃபிளிப்கார்ட். 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் ஆன்லைன் மூலம் புத்தக விற்பனையை மேற்கொண்டது. படிப்படியாக அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கியது. சுமார் 350 மில்லியன் பயனர்கள் இந்தத் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த சந்தையில் சுமார் 31.9 சதவீதப் பங்கு ஃபிளிப்கார்ட் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த 7 மாதங்களில் 60 லட்சம் பயனர்களுக்கு மேலான எண்ணிக்கையை 'Flipkart Pay Later' ஆப்ஷன் கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஃபிளிப்கார்ட் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை பணம் ஏதும் செலுத்தாமல் வாங்கிக் கொள்ளலாம். முப்பது நாட்கள் கடந்த பின்னர் அதற்கான தொகையை மொத்தமாகவோ அல்லது சுலப மாதத் தவணை திட்டத்தின் மூலமாகவோ செலுத்தலாம். அதிகபட்சம் 1 லட்ச ரூபாய் வரையில் இந்த வசதியின் மூலம் பயனர்கள், கடனில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், கடனுக்கான வரம்பு (கிரெடிட் லிமிட்) பயனருக்கு பயனர் மாறுபடும்.
தங்கள் தளத்தில் மாதத்திற்கு 3 மில்லியன் பரிவர்த்தனை Flipkart Pay Later மூலம் நடப்பதாகவும், அதில் 90 சதவீத பயனர்கள் தொடர்ச்சியாக இந்த வசதியை பயன்படுத்தி வருபவர்கள் எனவும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago