புதுடெல்லி: பருத்தி ஜவுளி ஏற்றுமதி 2021-22 நிதி ஆண்டில் ரூ.1.14 லட்சம் கோடியாக (15.29 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.
ரூ.1.02 லட்சம் கோடி (13.6பில்லியன் டாலர்) அளவுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விடவும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் பருத்தி ஜவுளி ஏற்றுமதி ரூ.73,500 கோடியாக (9.8 பில்லியன் டாலர்) இருந்தது. குறிப்பாக, சீனா, எகிப்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்திய பருத்தி ஆடைகளுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது பருத்தியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருத்தி ஜவுளி ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும், பருத்தி விலை உயர்வு ஐவுளித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஜவுளித் துறையின் மதிப்பு ரூ.16.7 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஜவுளி ஏற்றுமதியின் பங்கு ரூ.3.33 லட்சம் கோடி ஆகும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago