இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் ரூ.7.92 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய முதல் நிறுவனம் ரிலையன்ஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.7.92 லட்சம் கோடி (102 பில்லியன் டாலர்) வருவாய் ஈட்டியுள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டில் 100 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற அடையாளம் ரிலையன்ஸுக்கு கிடைத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த சென்ற நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ரிலையன்ஸின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்து ரூ.16,203 கோடியாக உள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டில் அதன் நிகர லாபம் ரூ.13,227 கோடியாக இருந்தது. நான்காம் காலாண்டில் அதன் வருவாய் 35 சதவீதம் உயர்ந்து ரூ.2.32 லட்சம் கோடியானது

பெட்ரோல் - டீசல், தொலைத்தொடர்பு, சில்லரை வணிகம் ஆகிய துறைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதன்மையாக செயல்பட்டு வருகிறது. இத்துறைகள் கடந்த ஆண்டு பெரும் வளர்ச்சியடைந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாயும் லாபமும் அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக சென்ற நிதி ஆண்டில் ரிலையன்ஸின் நிகர லாபம் ரூ.60,705 கோடியாகவும், வருவாய் ரூ.7.92 லட்சம் கோடியாகவும் (102 பில்லியன் டாலர்) உள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டில் 100 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற அடையாளத்தை ரிலையன்ஸ் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்