கூடுதலாக 100 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இந்தியா திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் நிலக்கரி உற்பத்தியை 100 மில்லியன் டன் அளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிலக்கரித் துறை செயலர் ஏ.கே. ஜெயின் தெரிவித்துள்ளார். இதற்கென்று, மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலக்கரி உற்பத்தியிலும், இறக்குமதியிலும், நுகர்விலும் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. ஆண்டுக்கு 777 மில்லியன் டன் அளவில் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது. 1 பில்லியன் டன்னுக்கு மேலாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியா கடும் நிலக்கரித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதம் பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE