நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.1.67 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை: மறைமுக வரிகள், சுங்க வாரிய அதிகாரிகளுக்கு மத்திய வருவாய் செயலர் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.1.67 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதற்காக, மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரிய அதிகாரிகளை மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ் பாராட்டினர்.

மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் (சிபிஐசி) எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டுக்கான வியூகம் மற்றும் செயல் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, சரக்கு மற்றும்சேவை (ஜிஎஸ்டி) வரி மற்றும் சுங்கத் துறை முதன்மை தலைமை ஆணையர்கள், தலைமை ஆணையர்கள், முதன்மை தலைமை இயக்குநர்கள், தலைமை இயக்குநர்களின் வருடாந்திர மாநாடான ‘சங்கல்ப்’, கடந்த 2 நாட்களாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது.

இதில், மத்திய அரசின் வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிதி ஆண்டின் தொடக்கத்தில், அதாவது, 2022 ஏப்ரலில் ரூ.1.67 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதற்காக சிபிஐசி அதிகாரிகளை தருண் பஜாஜ் பாராட்டினர்.

முன்னதாக, சிபிஐசி தலைவர் விவேக் ஜோரி வரவேற்றார். வருவாய் வசூல், வரி ஏய்ப்பை கண்டறியவும், போலி ரசீதுகளை தடுக்கவும், பல்வேறு துறைமுகங்களில் போதை மருந்து கடத்துவதை கண்டறியவும், தரவு பகுப்பாய்வின் பயன்பாடு உள்ளிட்ட துறைகளில் 2021-22 ஆண்டில் சிபிஐசி மேற்கொண்ட சாதனைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

சுங்கத் துறை முதன்மை ஆணையர் எம்விஎஸ் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்