வட்டி வீதம் அதிகரிப்பால் வணிகத்தில் கடும் பாதிப்பு: தொழில் வர்த்தக சங்கம் கருத்து

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்காக விதிக்கப்படும் வட்டி விகிதத்தை 2 ஆண்டுகளுக்குப் பின் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகள் வழங்கும் தொழில் வணிகத் துறைக்கான கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், நகைக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி அதிகரிக்கும். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் தொழில் வணிகத் துறையினர் தவிக்கும் நிலையில், இந்த வட்டி உயர்வு கடும் பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவே வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. இந்த நடவடிக்கையால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி வெகுவாக அதிகரித்து பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள், மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பணவீக்கம் குறைந்ததாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வட்டி அதிகரிப்பால் பணப்புழக்கம் குறைந்து, உற்பத்தி பொருட்கள் வாங்குவது குறையும். இது ஒட்டுமொத்தமாக தொழில்துறையை பாதிக்கும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பைத் தவிர்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்