சென்னை: கடந்த சில தினங்களாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வந்தநிலையில் இன்று குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து வந்தது. இந்தநிலையில் இன்று விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 குறைந்து ரூ.4,855-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.384 குறைந்து ரூ.38,840-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,032-க்கு விற்பனையாகிறது.
» ரூ.61 ஆயிரம் கோடி நிதியுதவி: கடன் வாங்க சவுதியில் காத்திருக்கும் பாகிஸ்தான் நிதியமைச்சர்
» வழிபாட்டுத் தலங்களிலிருந்து 54,000 ஒலிப்பெருக்கிகள் அகற்றம்: உ.பி. அரசு அறிக்கை
வெள்ளி விலை
வெள்ளியின் விலை ரூ.1.90 குறைந்து ரூ.67.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,600 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
11 days ago