ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியை எட்டியது. புதன்கிழமை பங்குச் சந்தையில் நிறுவனப் பங்கு விலைகள் ஏறியதைத் தொடர்ந்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19 லட்சம் கோடியை எட்டியது. இந்த அளவை எட்டிய முதலாவது நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் பெற்றுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.85 சதவீதம் உயர்ந்து ரூ.2,827.10 என்ற விலையில் வர்த்தகமானது. இதனால் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.19,12,814 கோடியாக உயர்ந்தது. கடந்த மார்ச் மாதம் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.18 லட்சம் கோடியை எட்டியது.

இந்த ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 19 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனமும் சர்வதேச அரசியல் சூழலால் பாதிக்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்