கடந்த 10 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,500 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,896-க்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,504 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. அதிக முதலீட்டாளர்கள்பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25குறைந்து ரூ.4,862-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,896 -க்கு விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,088-க்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம்விலை பவுனுக்கு ரூ1,504 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை நேற்று ரூ.69,800-ஆக இருந்தது. வெள்ளி விலையும் கடந்த 10 நாட்களில் கிலோவுக்கு ரூ.5,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்