கடுமையாக உயர்ந்த தங்கம் விலை சற்று குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை கடும் உயர்வு கண்டது. இந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.5,029-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.40,232-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.43,424-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து ரூ.74.90-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,900 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE