சென்னை: பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி கடந்த எட்டு ஆண்டுகளில், 291 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 1,177 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, 2021-22ஆம் நிதியாண்டில் 4,600 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 291 சதவீதம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் தரவுகளின்படி, இந்தியா உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
முந்தைய ஆண்டுகளை விட, 2021-22ஆம் ஆண்டில், சர்க்கரை ஏற்றுமதி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக சரக்கு கட்டணங்கள், கொள்கலன் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் மற்றும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " உலகளாவிய சந்தைகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் உதவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
48 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago