முகேஷ் அம்பானி முதலிடம், அதானி 2-ம் இடம்: இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் யார்? - ஃபோர்ப்ஸ் பட்டியல்

By எல்லுச்சாமி கார்த்திக்

2022-க்கான இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை நிறுவனமான ‘ஃபோர்ப்ஸ்’ ஆண்டுதோறும் உலகின் முதல்நிலை கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலையும் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 2,668 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 12.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 171 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். உலக அளவில் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள் யார் யார்? - 10வது இடத்தில் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டாக் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். தனது நிதி நிறுவனத்தை வங்கியாக வளர்ச்சி பெற செய்தவர் அவர்.

9-வது இடத்தில் மருந்துகளை தயாரித்து வரும் சன் ஃபார்மா நிறுவனர் திலீப் சாங்க்வி 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். சர்வதேச அளவில் நல்ல வருவாயை ஈட்டி வரும் இந்த நிறுவனத்தை அவர் 1983 வாக்கில் நிறுவினார்.

8-வது இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். அவர் கடந்த ஆண்டு கடன் மற்றும் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் வோடாபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார்.

7-வது இடத்தில் ஓ.பி.ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால் உள்ளார். மொத்தம் 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை வைத்துள்ளார் 72 வயதான அவர். அவரது குழும நிறுவனங்களில் ஒன்றான ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் எனர்ஜி பங்குகள் மூலம் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவின் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்மணி சாவித்திரி ஜிண்டால்.

6-வது இடத்தில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத் தலைவராக உள்ள லட்சுமி மிட்டல் 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை வைத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டுமே அந்நிறுவனம் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிகர லாபமாக பெற்றதாக தகவல்.

5-வது இடத்தில் டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி உள்ளார். அவர் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை வைத்துள்ளார். முதலீட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் டி-மார்ட் ரீடெய்ல் அங்காடிகளை நிறுவனர். கடந்த ஆண்டு மும்பையில் இவர் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வீடு ஒன்று வாங்கியுள்ளார்.

4-வது இடத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது அவரது நிறுவனம்.

3-வது இடத்தில் தமிழகத்தில் பிறந்தவரான ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

2-வது இடத்தில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த தொழில்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார் அதானி.

முதல் இடத்தில் பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். டாப் 10 உலக கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்தில் உள்ளார் அம்பானி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்