பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 108.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ 99.04 ஆகவும் விற்பனையாகிறது.

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கடந்த நவம்பர் 2021க்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த அக்டோபருக்குப் பின்னர் ஏற்றமில்லாமல் இருந்தது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டுமே ஏற்றம் கண்டது.

கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இன்று வரை 10 முறை விலை உயர்ந்துவிட்டது.

இதன் நீட்சியாக அத்தியாவசியப் பொருட்களில் நிலையும் உயர்ந்துள்ளது. இதனால் சாமான்ய மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ.7.20 வரை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 108.,21. ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 98.28 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 108.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ 99.04 ஆகவும் விற்பனையாகிறது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE