இந்தியாவின் காபி ஏற்றுமதி 9% உயர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவின் காபி ஏற்றுமதி இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில் 9.32 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பில் இது ரூ. 2,567 கோடியாகும். சர்வதேச சந்தையில் காபிக்கு அதிக விலை கிடைத்ததால் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது என்று காபி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தியாவின் காபி ஏற்றுமதி வருமானம் ரூ. 2,347 கோடியாக இருந்தது. ஏற்றுமதி அளவு 1,59,275 டன்னாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,59,295 டன் காபி கொட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் காபி கொட்டைக்கு அதிக விலை கிடைத்தது. இதனால் சராசரியாக ஒரு டன் ரூ. 1,61,160 என்ற விலைக்கு விற்பனையானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஒரு டன் ரூ. 1,47,394 என்ற விலைக்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் காபி விலை 80 சதவீத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. உலகிலேயே அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் பிரேஸிலில் காபி விளைச்சல் குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

காபி ரகங்களில் அராபிகா 43,465 டன் ஏற்றுமதியானது. கடந்த ஆண்டைவிட இது 31 சதவீதம் கூடுதலாகும். ரொபாஸ்டா ரகம் 73,645 டன் ஏற்றுமதியானது. ரொபஸ்டா ரகம் மட்டும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைவாகும்.

இன்ஸ்டன்ட் காபி ரகம் 91 சதவீதம் உயர்ந்து 18,875 டன் ஏற்றுமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 9,850 டன் காபி மட்டுமே ஏற்றுமதியானது.

உள்நாட்டு நுகர்வு 3,11,500 டன்னாகும். 2013-14-ம் அறுவை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீதம் குறைவாகும். 2012-13-ம் ஆண்டில் நுகர்வு 3,18,200 டன்னாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

27 mins ago

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்