நவ.2021க்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிலிண்டர் விலையும் ஏற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2021 நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கடந்த நவம்பர் 2021க்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் கடந்த அக்டோபருக்குப் பின்னர் ஏற்றமில்லாமல் இருந்தது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டுமே ஏற்றம் கண்டது.

இந்நிலையில், ரஷ்யா மீதான உக்ரைன் படையெடுப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ரூ.119 ஆக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை விவரம்:

நகரங்கள் பெட்ரோல் (ரூபாய்) டீசல் (ரூபாய்) டெல்லி 96.21 86.67 மும்பை 110.82 95.00 கொல்கத்தா 105.51 90.62 சென்னை 102.16 92.19

உலகிலேயே இந்தியா தான் அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்கிறது. தனது தேவையில் 85%க்கு இந்தியா இறக்குமதியை நம்பியுள்ளது.

சிலிண்டர் ஷாக்! பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்ல எல்பிஜி சிலிண்டரின் விலையும் ஏறியுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது. 2021 அக்டோபர் 6 ஆம் தேதிக்குப் பின்னர் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விலையேற்றத்தின் படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்று ரூ.949.50க்கு, கொல்கத்தாவில் ரூ.976க்கும், சென்னையில் ரூ.965.50க்கும் விற்கப்படும். அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசத்தில் ரூ.987.50க்கு விற்கப்படும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் சாமான்ய மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்