ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரால் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள மூலப்பொருட்கள் விலை உயர்வு, இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. ஏற்கெனவே உள்நாட்டில் மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள், இதனால் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
இது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கார்த்திக் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய தாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுப்படுத்த இயலாதவகையில் தொடரும் மூலப்பொருட் கள் விலை உயர்வால் கோவை பம்ப் உற்பத்தி துறை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் மூலப்பொருட்களின் விலையானது தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது.குறிப் பாக அயர்ன், ஸ்டீல், காப்பர் மற்றும்அலுமினியத்தின் விலை உயர்ந் துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பம்ப்செட் உற்பத்திக்கு ஆகும் செலவு முந்தைய செலவிலிருந்து 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் 30 சதவீதபணியாளர் திறனுடன் மட்டுமே கோவையில் பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கி கடந்த 7 நாட்களில் மட்டும் காப்பர் விலை கிலோவுக்கு ரூ.56, அலுமினியத்தின் விலை ரூ.40, பிக் அயர்ன் விலை ரூ.7, ஸ்டீல் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இது மேலும் மேலும் உற்பத்தியாளர் களை பாதிக்க செய்து வருகிறது. மேற்குறிப்பிட்ட மூலப்பொருட் களில் சில இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற நிலையில், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் உள்நாட் டில் விலை ஏற்றப்படுகிறதா அல்லது ஏற்றுமதி தேவை அதிகரிப்பால்உள்நாட்டில் விலை உயர்கிறதா என்ற காரணத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாங்களும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இவ்விவகாரத் தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
தற்போதுள்ள மிகவும் நெருக்கடியான நிலையிலாவது மத்திய அரசு தலையிட்டு அயர்ன் மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளர்களிடம் பேசி மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை சிறு, குறு பவுண்டரி அதிபர்கள் சங்க தலைவர் ஏ.சிவசண்முககுமார் கூறும்போது, “அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து அதிகளவில் ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அந்நாடுகளுக்கு அடுத்து இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. உக்ரைன் மற்றும்ரஷ்யா இடையிலான போரால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இது மூலப்பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது” என்றார்.
இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் சி.பாலசுப்ர மணியன் கூறும்போது, “போரால் சர்வதேச சந்தையில் அனைத்து வித மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன.
இதனால் இந்தியாவிலும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்வோர் விலையை உயர்த்தியுள்ளனர். குறிப்பாக நிக்கல் விலை கடந்த 10 நாட்களில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பிரச்சினையில் உள்ள தொழில் துறையினருக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் எவ்வளவு உயரும் என்பதை நினைத்தே நாங்கள் கவலை கொள்கிறோம். மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு மூலப்பொருட்கள் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும். இதில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago