குறைந்தபட்ச ஜிஎஸ்டி 5% -லிருந்து 8%-ஆக உயர்த்த பரிசீலனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் 5%-லிருந்து 8%-ஆக உயர்த்துவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜிஎஸ்டி 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளில் உள்ளன. இந்நிலையில் குறைந்தபட்ச விகிதத்தை 5% - லிருந்து 8% - ஆக உயர்த்துவது தொடர்பாக அமைச்சர்கள் குழு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அது தொடர்பான கலந்தாலோசனை அந்தக் கூட்டத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குறைந்தபட்ச விகிதம் 8 % - ஆக உயர்த்தபடுவதன் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி கூடுதல் வரிவருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜிஎஸ்டி 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்குகளிலிருந்து 8%,18%,28% என்ற மூன்று அடுக்குகளாக குறைப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஜிஎஸ்டி மூன்று அடுக்குகளாக குறைக்கப்படும்பட்சத்தில் 12% அடுக்கில் வருபவை 18% அடுக்கின்கீழ் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்