புதுடெல்லி: 2022 பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,33,026 கோடியாக வசூலிக்கப்பட்டது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,435 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,471 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.33,837 கோடி உட்பட) மற்றும் மேல்வரி ரூ.10,340 கோடி
(பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.638 கோடி உட்பட).
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.26,347 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.21,909 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாய் வழக்கமான, தற்காலிக பணம் செலுத்துதலுக்குப்பின்பு, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ. ரூ.50,782, மாநில ஜிஎஸ்டிக்கு ரூ. 52,688 கோடியாக இருந்தது.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருந்ததால் ஜனவரியை விட வருவாய் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியை 5-வது முறையாக கடந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் முதல் முறையாக மேல்வரி வசூல் ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளதற்கு முக்கிய துறைகள் குறிப்பாக வாகனங்கள் விற்பனை அதிகரித்ததும் காரணமாகும்.
தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வசூல் ரூ.7,393 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.7,008 கோடி வசூலாகியிருந்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலாகியிருந்த ரூ.158 கோடிக்கு பதிலாக இந்த ஆண்டு ரூ.178 கோடியாக ஜிஎஸ்டி வசூல் இருந்தது. இது 13 சதவீதம் அதிகமாகும்.
மொத்தத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 12 சதவீதம் அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூல் இருந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago