செபி அமைப்பின் புதிய தலைவராக மாதவி புரி நியமனம்

By செய்திப்பிரிவு

மும்பை: செபியின் புதிய தலைவராக மாதவி புரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகி 2017ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.

பின்னர் அஜய் தியாகிக்கு ஆறு மாதம் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் 2020 ஆகஸ்ட் மாதம் மீண்டும் அவரது பதவிக்காலம் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

செபியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அஜய் தியாகியின் பதவிக்காலம் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து செபியின் புதிய தலைவராக மாதவி புரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜய் தியாகியுடன் மாதவி

செபி அமைப்பில் நிர்வாகக்குழுவின் முழுநேர உறுப்பினராக கடந்த 2017 ஏப்ரல் முதல் பதவி வகித்து வந்த மாதவி புரி பங்குச்சந்தை சார்ந்த பல்வேறு குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். செபி அமைப்பின் முதல் பெண் தலைவராக மாதவி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1989ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் தனது பணியை தொடங்கிய மாதவி கார்ப்பரேட் பைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். கடந்த 2009 முதல் 2011 வரை ஐசிஐசிஐவங்கி பங்குச்சந்தை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்