தங்கம் விலை மேலும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.

இந்தநிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.71 குறைந்து ரூ.4738- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.568 குறைந்து ரூ. 37904-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 40832-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ 69.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 69,000 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE