சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இது எதிரொலியாக தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதுரஷ்யா இன்று தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4827- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ. 38616-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 41544-க்கு விற்பனையானது.
» ரஷ்யா - உக்ரைன் போர் | மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா அச்சம்
» தாவூத் தொடர்பு, பண மோசடி? - மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது பின்னணி
இந்தநிலை இன்று பிற்பகல் நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. காலை நேரத்தை ஒப்பிட்டால் மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.47 அதிகரித்துள்ளது. கிராம் ரூ.4874 ஆக விற்பனையாகி வருகிறது.
காலை நிலவரத்தை ஒப்பிட்டால் 4 மணிநேரத்தில் பவுனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ. 38992-ஆக மாலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 41920-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை ரூ.2.70 உயர்ந்து ரூ.71.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 71,400 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
46 mins ago
வணிகம்
7 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago