பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் கெளப்பர் என்னும் ஆங்கிலக் கவிஞர் பாடினார், “Variety is the spice of life.” மாறுபாடுகள்தாம் வாழ்க்கையின் சுவையே என்று இதற்கு அர்த்தம். எழுத்துக்கு எழுத்து நிஜம். நாம் பயணித்திருக்கும் 32 தேசங்களில், எத்தனை விதம் விதமான பூகோள அமைப்புகள், வரலாற்றுப் பின்புலங்கள்? மனிதர் களின் மாறுபட்ட உடைகள், பழக்க வழக்கங்கள், தொழில் கலாச்சாரங் கள்....... எத்தனை வித்தியாசங்கள்.....?
சுமார் கோடி கிலோமீட்டர்கள் பரந்து விரிந்து கிடக்கும் பிரம்மாண்ட ரஷ்யா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில்; வெறும் 697 சதுரக் கிலோமீட்டர்களே இருக்கும் துக்குனூண்டு சிங்கப்பூர்.
நூறு கோடி மக்கள் வாழும் இந்தியா, சீனா, 8 லட்சம் பேரே வசிக்கும் பூடான்.
நடுநிலைமைக் கொள்கையோடு, அமைதிப் பூங்காவாகத் திகழும் ஸ்விட்சர்லாந்து; பகைமை நாடுகளுக்கு மத்தியில், தன் பாதுகாப்புக்குத் திண்டாடும் இஸ்ரேல்.
மன்னர்களுக்கு ஆட்சியில் இன்றும் முதன்மை தரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், கனடா, சவுதி அரே பியா, தாய்லாந்து, பெல்ஜியம், பூட்டான், நெதர்லாந்து, மலேஷியா, ஜப்பான், ஸ்பெயின்; சர்வாதிகாரிகளின் கைப்பிடியில் இருக்கும் சீனா, எகிப்து, வியட்நாம்; மக்கள் குரல் மகேசன் குரலாக ஒலிக்கும் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற பல நாடுகள்.
தொழில் கலாச்சாரத்திலும், தனித் துவம் இருக்கிறதே? ஊழலே இல்லாமல் பிசினஸ் நடக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் வரிசையில் வரும் ஸ்வீடன், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி; லஞ்சம் பிசினஸின் அங்கமாக இருக்கும் நேபா ளம், ரஷ்யா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ......இன்னும் பல.
அலுவலகத்துக்கும், பிசினஸ் சந்திப்புகளுக்கும் அணியும் உடைகளி லும் எத்தனை தனித்துவங்கள்? அமெரிக்காவில் ஷார்ட்ஸ், டி ஷர்ட் போட்டுக்கொண்டு வரலாம். ஜப்பானில் கோட், சூட் இல்லாமல் வந்தால், மேலும் கீழுமாகப் பார்க்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஷேக்குகள் தலைப்பாகையும், அங்கியும், பூட்டானில் கேரா (Kera), நம் ஊரில் சில பிசினஸ்மேன்கள் அணியும் வேட்டி.இத்தனை விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறேனே, என் பிசினஸை வளர்க்க இது எப்படி உதவும் என்று கேட்கிறீர்களா? பிசினஸ் என்பது வெறும் பணத்தைத் தந்து பொருட்களை வாங்கும் பரிவர்த்தனையல்ல. நீண்ட நெடுங்காலமாக பிசினஸ் நீடிக்க வேண்டுமென்றால், விற்பவருக்கும், வாங்குபவருக்குமிடையே நூறு சதவீதம் புரிதல் இருக்கவேண்டும். இந்தப் புரிதல் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை உண்டாக்கும். இந்த நம்பிக்கை உருவாகிவிட்டால், பிசினஸ் தானாகவே வேர்விட்டுக் கிளைவிட்டு வளரும். உள்ளூர் வியாபாரத்துக்கே இது பொருந்தும் என்றபோதிலும், ஏற்றுமதி இறக்குமதி என்கிற வெளி நாட்டு வியாபாரம் என்கிறபோது, இன்னும் சிக்கலானதாகிறது. நீங்கள் ஒன்றைச் சொல்ல, அவர் இன்னொன் றைப் புரிந்துகொள்ள இரு நாட்டு பிசினஸ் மேன்களுக்குமான கருத்துப் பரிமாற்றத்தில், 7 விதமான காரணங் களால் சிக்கல்கள் ஏற்படலாம் என்று மனோதத்துவ மேதைகள் சொல்கிறார் கள். அந்தத் தடைக்கற்கள் இவைதாம்:
1. எல்லைத் தடைகள் (Physical Barriers)
போனில் பேசும்போது, இ-மெயிலில் எழுதும்போது, சில சமாச்சாரங்கள் பிரச்சினைகளாகின்றன. நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது, எளிதில் தீர்வுகள் கிடைக்கும், இதை நீங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள். இரு நாட்டினர் பிசினஸ் செய்யும்போது, இருவருக்கும் இடையே இருக்கும் தூரத்தால், அடிக்கடி சந்திக்க முடியாது. இதனால், சிறிய கருத்து வேறுபாடுகளும், பூதாகரமாகும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
2. கண்ணோட்டத் தடைகள் (Perceptual Barriers)
சில நாடுகளைப் பற்றி நம் மனங்களில் பிம்பங்கள் உருவாகியி ருக்கும். உதாரணமாகப் பாகிஸ்தான் பிசினஸ்மேனைச் சந்திக்கிறீர்கள். அவர் “எதிரி நாட்டவர்” என்னும் எண்ணத்தோடு சந்தித்தால், உங்கள் பிசினஸ் ஒரு அடிகூட முன்னே நகரமுடியாது.
3. உணர்ச்சித் தடைகள் (Emotional Barriers)
நீங்கள் சீனாவோடு பிசினஸ் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்தால், இன்னொரு சீன பிசினஸ்மேனைச் சந்திக்கும்போது, பழைய நினைவுகள் என்னும் சுமையோடு போனால், புதிய பிசினஸ் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
4. மொழித் தடைகள் (Language Barriers)
உலக அளவில் 6,912 மொழிகள் உள்ளன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தலின் அடிப்படையே மொழிதான். மொழி பெயர்ப்பவர் எத்தனைதான் வல்லுநராக இருந்தாலும், வீரியம் குறையாமல் நம் கருத்துகளை அவர் எடுத்துவைக்க முடியுமா?
5. கலாச்சாரத் தடைகள் (Cultural Barriers)
ஒவ்வொரு நாட்டுக்கும் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் மாறுபடுவதைப் பார்த்தோம். சில நாடுகளில் பெண்களோடு கை குலுக்கலாம்; சில நாடுகளில் பெண்களிடமிருந்து விலகியே நிற்கவேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ, இதுபோன்ற உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டால், உறவுகளும், பிசினஸும் பாதிக்கப்படும்.
6. ஆண் - பெண் குணநலத் தடைகள் (Gender Barriers)
ஆண்களும், பெண்களும் அறிவி லும், திறமையிலும் சரி நிகர் சமனமான வர்கள்தாம், ஆனால், அவர்களுடைய மனப்பாங்குகள் அடியோடு மாறுபட் டவை என்று மனோதத்துவ ஆராய்ச் சிகள் கூறுகின்றன. உதாரணமாக,
ஆண்கள் விரும்புவை, மதிப்பவை - அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள். பெண்கள் விரும்புபவை அன்பு, பழகுதல், அழகு, உறவுகள்.
பிரச்சினைகள் வரும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, ஆண்கள் தனிமையை விரும்புகிறார்கள். தாங்களே தீர்வுகள் காண ஆசைப் படுகிறார்கள். தேவைப்பட்டால் மட்டுமே பிறரோடு அவற்றைப் பகிர்ந்துகொண்டு தீர்வுகள் குறித்து ஆலோசனை கேட்கிறார்கள்.
பெண்கள் பிரச்சினைகள், மன உளைச்சல் குறித்துப் பிறரோடு பேச விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பேச்சைக் கேட்காவிட்டால், மனம் உடைந்து போகிறார்கள்.
நம் நாட்டிலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும், கார்ப்பரேட் உலகத்தில் பெண்கள் நுழைவு அதிகமாகிவருகிறது. பேச்சு வார்த்தை களிலும் அவர்கள் அதிகமாகப் பங்கேற் கிறார்கள். எனவே, ஆண்களும், பெண்களும், பிரச்சினையைத் தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காமல், ஆண்-பெண் குணநலத் தடைகளையும் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. பழகும் முறைத் தடைகள் (Interpersonal Barriers)
நாம் ஒவ்வொருவரும் குணநலன் களால் மாறுபட்டவர்கள், சிலர் ஒருவரைச் சந்திக்கும்போது, தயக்கமே இல்லாமல் அவர்களோடு பேசுவார்கள், நெருங்கிப் பழகுவார்கள். சிலர் புதியவர்களிடம் பேச மாட்டார்கள், எளிதில் மனம் திறக்கமாட்டார்கள். சாதாரணமாக, முதல் தரப்பினரோடு பேச, பழக நாம் விரும்புகிறோம். அடுத்த தரப்பினரைத் தவிர்க்கிறோம். இந்த முன் அனுமானங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடைகளாகி விடுகின்றன.
பேச்சு வார்த்தைகளுக்குப் போகி றோம். அவர்கள் கலகலப்பாகப் பழகாவிட்டால், நம் கருத்துகளை எடுத்துவைக்கத் தயங்குகிறோம். பேச்சு முன்னேறுவதேயில்லை,
ஒவ்வொருவர் ஆளுமையும் மாறுபடும், அவர்கள் பின்புலத்தால், குடும்பச் சூழ்நிலையால், வளர்க்கப்பட்ட விதத்தால், நாட்டுக் கலாச்சாரத்தால் வித்தியாசப்படும் என்பதை உணர்ந்து, முன் அனுமானங்கள் ஏதுமின்றி, திறந்த மனத்தோடு அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பிற நாடுகளை, அவர்கள் பழக்க வழக்கங்களை, கலாச்சாரங்களைப் புரிந்துகொண்டால், இந்த 7 தடைக ளையும் எளிதாக வெல்லலாம். உறவுகள் பலப்படும், பிசினஸ் அமோகமாக வளரும்.
ஏற்றுமதி இறக்குமதி பிசினஸில் உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
(நிறைவடைந்தது)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
58 mins ago
வணிகம்
10 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago