சென்னை: உக்ரைன் விவகாரத்தால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இன்று 4738 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
» பஞ்சாபில் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்யும் பாஜக தலைவர்கள்: விவசாயிகள் எதிர்ப்பு காரணமா?
இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.4738- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ. 37904-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 40832-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 60 பைசா உயர்ந்து ரூ 69.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 69,200 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago