மும்பை: பிரபல தொழிலதிபரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ராகுல் பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83.
நிமோனியா மற்றும் இருதய பிரச்சினை காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் ரூபிஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார்.
ராகுல் பஜாஜுக்கு முழு அரசு இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த தொழிலதிபரை நாடு இழந்துவிட்டதாக தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவரது இறுதிச் சடங்குகள் புனேயில் இன்று நடைபெறும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து இவர்விலகி பொறுப்புகள் அற்ற தலைவராக இருந்தார். 2001-ம் ஆண்டில் நாட்டின் மிகப் பெரிய சிவிலியன் விருதான பத்மபூஷண் விருதைப் பெற்றவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்
ராகுல் பஜாஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago