வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு?

By செய்திப்பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என அழைக்கப்படும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் விகிதத்தை - 3.35 சதவீதத்தில் இருந்து 3.55 சதவீதமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது.

இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. ரொக்க கையிருப்பு விகிதம்(சிஆர்ஆர்) 4 சதவீதத்திலும், எஸ்எல்ஆர் விகிதம் 18 சதவீதத்திலும் தொடரும்.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா திங்கள்கிழமை துக்கம் அனுசரிப்பதாக அறிவித்ததையடுத்து, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் மூன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10-ம் தேதி) முடிவடைகிறது. அன்று தனது முடிவை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

பொருளாதார வல்லுனர்கள் சிலர் ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என அழைக்கப்படும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் விகிதத்தை - 3.35 சதவீதத்தில் இருந்து 3.55 சதவீதமாக உயர்த்தும் என்று தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை சீராக வைத்திருக்கும் என்று சில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா தொற்று 3-வது அலையின் வேகம் முழுமையாக குறையாத நிலையில் இந்த மாற்றங்கள் இருக்காது என தெரிவிக்கின்றன.

கரோனா தொற்றுநோய்க்கு முன்னதாக சந்தைகளில் அதிகரித்த உபரி பணப்புழக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக ரெப்போ விகிதத்தில் அதிகரிப்பு இருக்கும் என பல பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். மற்ற சில பொருளாதார ஆலோசகர்கள்,
ஏப்ரலில் நடக்கும் அடுத்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் 25 பிபிஎஸ் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE