நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடும் சரிவைக் கண்டுள்ள நிலையில் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்குக்கு 2,900 கோடி டாலர் (29 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தை யான நாஸ்டாக்கில், நேற்றை தினம் மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 26.39% அளவில் சரிவைக் கண்டது. இதனால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
மெட்டா நிறுவனத்தில் மார்க் ஸூகர்பெர்க் 12.8 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு 29 பில்லியன் டாலர் குறைந்து 85 பில்லியன் டாலராக உள்ளது. முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஒரே நாளில் 35 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தார்.
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பில்லியனர்கள் பட்டியில் மார்க் ஸூகர்பெர்க் 12-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி முன்னிலைக்கு சென்றுள்ளனர்.
சீனா செயலியான டிக் டாக், கூகுளின் யூடியூப் ஆகியவை பேஸ்புக்குக்கு போட்டியாக செயல்பட்டு வரு கின்றன. இதனால் பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால், நடப்புக் காலாண்டில் பேஸ்புக் வருவாய் குறையக்கூடும் என்று மெட்டா நிறுவனம் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டது. அதன் நீட்சியாகவே மெட்டாவின் பங்கு மதிப்பு சரிவைக் கண்டதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago