மத்திய பட்ஜெட் 2022: கிரிப்டோ வரி 30%, வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை | முக்கிய அம்சங்கள் 2

By செய்திப்பிரிவு

புது டெல்லி: வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேவேளையில், மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி (கிரிப்டோ வரி) விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் சிறப்பு அம்சங்கள் - பகுதி 2 விவரம்: > ரூ. 44605 கோடி மதிப்பிலான கென் - பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

> உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும்

> திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்

> பொது போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத தூய்மையான போக்குவரத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

> ஒன்று முதல் 12 வரையிலான வகுப்புகள் தனித்தனி தொலைக்காட்சி அலைவரிசை, தற்போது 12 ஆக இருக்கும் இந்த அலைவரிசைகள் 200-ஆக உயர்த்தப்படும்

> துணைக் கல்வி வழங்கும் வகையில், பிராந்திய மொழியிலும் இந்த அலைவரிசைகள் மாணவர்களுக்கு வகுப்பு பாடங்களுக்கு இணையாக இவை போதிக்கும்
சிறு & நடுத்தர துறையில் விருந்தோம்பல் சேவையை மேம்படுத்த மார்ச் 2023க்குள் இசிஜிஎல் சேவையை ரூ. 50 ஆயிரம் அளவுக்கு விரிவுபடுத்த அரசு திட்டம்

> திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் டிஜிட்டல் தேஷ மின்னணு வாயிலான இணையதளம் ஏற்படுத்தப்படும்

> புதிய சட்டங்கள் மூலம் வாயிலாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும்

> மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும்

> ஒப்பந்தங்கள் வாயிலாக கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்க பொது, தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்

> நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.நம்பிக்கையின் அடிப்படையிலான அரசை உறுதி செய்ய திட்டம்

> 68 சதவீத பாதுகாப்பு மூலதன செலவின ஒதுக்கீடு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டம்

> முக்கிய துறைகளில் முன்னேற விரும்பும் 102 மாவட்டங்களில் கணிசமான முன்னேற்றம் பெண்கள் சக்தி ஒளிமயமான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது

> கடந்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்குமான குடிநீர் இணைப்புத் திட்டத்தின்கீழ், 5.5 கோடி இல்லங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு

> பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வரும் நிதியாண்டில் கண்டறியப்பட்டுள்ள பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் வழங்கப்படும்

> நகர்ப்புற மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் 280 கோடி ரூபாய் செலவில் திறன் மையங்கள் உருவாக்கப்படும்

> குறைந்த மக்கள்தொகை கொண்ட எல்லைப்புற கிராமங்களில் புதிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஓரளவு இணைப்புகள் ஏற்படுத்தப்படும்

> மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம்

> குஜராத்தின் கிப்ட் சிட்டியில் சர்வதேச தீர்ப்பாயத்தை மத்தியஸ்த அமைப்பை உருவாக்க முடிவு

> மின்னணு வரைகலை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் கார்டூன் படங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை வளர்க்கவும் திட்டங்களை வடிவமைக்க சிறப்பு பணிக்குழு

> சுலபமான வாழ்க்கை & எளிதான வணிகம் புரிதலை ஊக்குவிக்க எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யும் வகையிலான ’ஒரே தேசம் ஒரே பதிவு’ முறை அமல்படுத்தப்படும்

> பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மத்திய ரிசர்வ் வங்கி மின்னணு கரன்ஸி (மெய்நிகர் ரூபாய்) இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்கிறது

> வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு
மாநில அரசுகளுக்கு வழக்கமான கடன்கள் தவிர்த்து வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு திட்டம்

> பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க 10 நாட்களுக்குள் 75% பில்லை பணமாக்கும் முறை உருவாக்கப்படும். இதற்காக காகிதமற்ற மின்னணு பில்களை அமைச்சகங்கள் ஏற்படுத்தும்

> கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பொதுத்துறை திட்டங்களுக்கு பசுமை பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

> வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது

> காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டம்

> உயர்திறன் மிக்க பாலிசிலிக்கான் உற்பத்தி செய்ய உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ. 19500 கோடி ஒதுக்கீடு

> புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும்

> வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

> கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று முறை குறைந்த பட்ச வரி விகிதம் 18.5-லிருந்து 15 சதவீதமாக குறைப்பு

> நேரடி வரி விதிப்பில் கூடுதல் மாற்றங்கள்

> புதிய வருமான வரி படிவங்களை அடுத்த 2 மதிப்பீட்டு ஆண்டுக்கான படிவங்கள் சமர்ப்பிக்க அனுமதி

> அனல் மின் நிலையங்களில் ஆண்டுக்கு 38 MMT கரியமில வாயுவை குறைக்க 5-7% உயிரி உருண்டைகள் இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்

> மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது

> மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிப்பு (கிரிப்டோ வரி).

> மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும்

> நீண்டகால முதலீட்டு லாபம் மீதான கூடுதல் வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது

> புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

> இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டில் 68 % ஒதுக்கப்பட்டுள்ளது

> நாட்டை நவீனப்படுத்தும் ஆற்றல் கொண்ட பசுமை எரிசக்தி & சுலபமான போக்குவரத்து முறைகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்திய தொழில்துறையை மாற்றக்கூடியதாகும்

> ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளது

> நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது

> மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு

> குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது, பட்டை தீட்டாத வைரத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைப்பு

வாசிக்க > ஏழைகளுக்காக 80 லட்சம் வீடுகளுக்கு ரூ.48,000 கோடி - பட்ஜெட் 2022 | முக்கிய அம்சங்கள் 1

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்