மத்திய பட்ஜெட் 2022: எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு, வரி உயர்வு?

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட்டில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள முக்கிய அறிவிப்புகள்

* சுங்க வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். நியாயமான கட்டணங்கள் தொழில் வளர்ச்சிக்கு உகந்தவை. 7.5% மிதமான வரி என்ற திட்டம் இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்படுகிறது.

* வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரத்தின் மீதான சுங்க வரி5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* இமிடேஷன் நகைகளுக்கான வரி மற்றும் முக்கியமான ரசாயனங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

* சோடியம் சயனைடு மீதான வரி உயர்த்தப்படுகிறது

* குடைகள் மீதான வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சில வகை குடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட வரியும் திரும்பப்பெறப்படும்.

* ஸ்டீல் ஸ்கிராப்களுக்கு விதிக்கப்படும் வரி மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

* துருப்பிடிக்காத எஃகு மீதான வரி குறைப்பு திரும்பப் பெறப்படுகிறது.

* இறால் மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்