2022 ஜனவரி மாதம் 31ம் தேதி மாலை 3 மணி வரையிலான ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,38, 394 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,674 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ.32,016 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.72,030 கோடி ( பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.35,181 கோடி உட்பட) மற்றும் மேல்வரி ரூ.9,674 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.517 கோடி உட்பட). அதிகபட்ச மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த 2021 ஏப்ரல் மாதம் ரூ.1,39,708 கோடியாக இருந்தது. 36 லட்சம் காலாண்டு வரித்தாக்கல் உட்பட, 2022 ஜனவரி 30ம் தேதி வரையிலான ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் 1.05 கோடி.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.29,726 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.24,180 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.35,000 கோடியை 50:50 என்ற விகித அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இந்த மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமான, தற்காலிக பணம் செலுத்துதலுக்குப்பின்பு, 2022 ஜனவரி மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாய் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.71,900 கோடி. மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.73,696 கோடி. 2022 ஜனவரியில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.18,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி மாத வருவாய், கடந்தாண்டு இதே கால வருவாயை விட 15 சதவீதம் அதிகம். கடந்த 2020 ஜனவரி மாத வருவாயைவிட 25 சதவீதம் அதிகம். இந்த மாதத்தில் இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைந்த வருவாய் 26 சதவீதம் அதிகம் மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைத்த வருவாய் (இறக்குமதி சேவைகள் உட்பட) கடந்தாண்டு இதே கால வருவாயை விட 12 சதவீதம் அதிகம்.
» நிதி வளர்ச்சிகள் முதல் விலைவாசி வரை: பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 முக்கிய அம்சங்கள்
» கேரளா முதலிடம்: நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீடு வெளியீடு
தற்போது நான்காவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்துள்ளது. 6.7 கோடி இ-வே ரசீதுகள் 2021 ஜனவரியில் உருவாக்கப்பட்டன. இது கடந்தாண்டு நவம்பர் மாத இ-வே ரசீதுகளை விட 14 சதவீதம் அதிகம். பொருதார மீட்புடன், வரிஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காரணமாக ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த பல விவேகமான கட்டண விகிதங்கள் நடவடிக்கை காரணமாகவும், வருவாய் அதிகரித்துள்ளது. வருவாய் வசூலில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல் வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
45 mins ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago