2021-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 10% அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 2021-ம் ஆண்டில் தங்கத்துக்கான தேவையின் போக்கு குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. கரோனா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2020-ம் ஆண்டில் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை 3,658.8 டன்னாக இருந்தது. 2021-ம்ஆண்டில் தங்கத்தின் சர்வதேச தேவை 4,021.3 டன்னாக உயர்த்தது. இது முந்தைய ஆண்டைவிட 10% அதிகம். மேலும் கடந்த டிசம்பர் நிலவரப்படி இது கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத உயர்வாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறும்போது, “2021-ம் ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்புக்கு 4-ம் காலாண்டில் மத்திய வங்கியின் தங்க கொள்முதல், தங்க நகைகள் நுகர்வில் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை காரணமாக அமைந்தன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்