தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும், யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்று யூகங்கள். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகள், வேண்டுகோள்கள், மிரட்டல்கள், பேரங்கள், கூட்டு அறிவிப்புகள், மறுநாளே தொடரும் மறுப்புகள், அந்தர் பல்டிகள், எத்தனை நாட்கள் தொடருமோ என்னும் சந்தேகங்களோடு உறவுகள்.
பேச்சு வார்த்தைகளின் குறிக்கோள் என்ன? எல்லாக் கட்சிகளும் தங்க ளுக்கு அதிக சீட் வேண்டும் என்று விரும்புகிறார்கள். கூடிப் பேசி விவாதித்து, எல்லோரும் ஒத்துக்கொள்ளும்படியான முடிவுக்கு வரவேண்டும். எல்லோரும் ஒத்துக்கொளவது என்பது மிக முக்கியம். ஏனென்றால், அத்தனை கட்சிகளும் ஊர் கூடித் தேர் இழுத்தால்தான், நம் கூட்டணி எதிர்க் கூட்டணியை ஜெயிக்கமுடியும்.
வெற்றிகரமான பேச்சுவார்த்தை என்றால் டீல் முடியவேண்டும். டீல் முடிப்பது என்றால் என்ன? எல்லோரும் ஒத்துக்கொள்ளும் முடிவுகள் கிடைக்கவேண்டும்.
சில தலைவர்கள் ராஜதந்திரமாக இதைச் சாதிக்கிறார்கள்; சிலர் சொதப்புகிறார்கள். இந்தத் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் பிறவி வரமல்ல! நீங்களும் நானும் வளர்த்துக் கொள்ளவேண்டிய, வளர்த்துக்கொள்ளக் கூடிய சாமர்த்தியங்கள்.
அனைவருக்கும் தேவை
அது சரி, நான் அம்மாவோ கலைஞரோ இல்லையே, எனக்கும் அரசியலுக்கும் தொடர்பே கிடையாதே, எனக்கு எதற்கு டீல் பற்றித் தெரியவேண்டும் என்று கேட்கிறீர்களா? கலைஞர், அம்மா, விஜய்காந்த், வைகோ, ராமதாஸ், நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே இந்த டீல் போடும் திறமை அத்தியாவசியத் தேவை. அரசியலுக்கு மட்டுமல்ல, பிஸினஸுக்கும், பார்க்கும் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கும், ஏன், நம் எல்லோருடைய அன்றாட வாழ்க்கைக்கும்!
சில பிஸினஸ் டீல்கள்
கார்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறீர்கள். உங்களுடைய முக்கிய கஸ்டமர் மாருதி. அடுத்த வருடத்துக்கான ஆர்டரை முடிவுசெய்ய உங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்கள். உங்கள் மூலப் பொருட்கள் விலை ஏறிவிட்டது. உங்கள் தொழிலாளிகள் 10 சதவிகித சம்பள உயர்வு கேட்கிறார்கள். குறைந்த பட்சம் 7 சதவிகித விலையை ஏற்றினால்தான் லாபம் பார்க்கமுடியும். ”விலையைக் கூட்டுவது முடியவே முடியாத காரியம். நீங்கள் 8 சதவிகிதம் விலையைக் குறைத்தேயாகவேண்டும்” என்று மாருதி அடிமாட்டு பேரம் பேசுகிறார்கள். உங்கள் கம்பெனி மாருதியை நம்பி நடக்கிறது. அவர்கள் ஆர்டர் கிடைக்காவிட்டால், கம்பெனி அம்பேல். என்ன செய்யலாம்? எதைச் செய்தால் டீலை முடிக்கலாம், அவர்கள் ஆர்டரை வாங்கலாம்?
தீபாவளி வருகிறது. கடந்த சில மாதங்களாக பிஸினஸ் டல். 7 சதவிகித போனஸ் தருவதாக அறிவிக்கிறீர்கள். யூனியன் 15 சதவிகிதம் கேட்கிறார்கள். தராவிட்டால், ஸ்ட்ரைக் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். என்ன செய்யலாம்?
பார்க்கும் வேலையில் டீல்கள்
வேலைக்கு அப்ளை செய்தி ருக்கிறீர்கள். இன்டர்வியூ. ”உங்கள் வேலைக்கு நான்தான் மிகப் பொருத்தமானவன்” என்று பேட்டி காண்பவர்களை இம்ப்ரெஸ் செய்வது எப்படி?
உங்கள் வேலையைத் திறமையோடு செய்கிறீர்கள். உங்கள் மேனேஜரும் உங்கள் அர்ப்பணிப்பை, கடும் உழைப்பை அடிக்கடி பாராட்டுகிறார். ஆனால், சம்பள உயர்வும் ப்ரமோஷனும் பாலுவுக்குத்தான் தருகிறார். மேனேஜரிடம் சண்டை போட்டால் சீட்டைக் கிழித்துவிடுவார். பணிவாகக் கேட்டால், இந்தக் காது கேட்பதை அடுத்த காது வழியாகப் பறக்கவிட்டுவிடுவார். அவரிடம் என்ன பேசவேண்டும், எப்படிப் பேசவேண்டும்?
அன்றாட வாழ்க்கை டீல்கள்
உங்கள் மகன் முகுந்த் பக்கத்து வீட்டுக் குழந்தை அகிலாவோடு விளையாடுகிறான். அவள் பொம்மையைப் பிடுங்கிவிட்டான். அவளிடம் தர மறுக்கிறான். நீங்கள் கொடுக்கச் சொல்கிறீர்கள். அழுகிறான்.
“ப்ளீஸ், அகிலாகிட்டே பொம்மையைக் குடு” என்று கெஞ்சு வீர்களா?
“டேய், மரியாதையா பொம்மையை அவகிட்டே குடு” என்று அதட்டுவீர்களா?
“வீட்டுக்கு வாடா. உனக்கு வெச்சிருக்கேன்” என்று மிரட்டுவீர்களா? அதற்கும் பணியாவிட்டால், இரண்டு தட்டு தட்டுவீர்களா?
முகுந்த் பொம்மையைத் திருப்பித் தர வைக்கவேண்டும். சாம, தான, பேத தண்டம் – எது ஒர்க் அவுட் ஆகும்?
வீட்டில் உங்கள் அம்மாவுக்கும், மனைவிக்கும் தினமும் மாமியார் – மருமகள் லடாய். வீடு அமைதிப் பூங்காவாக வேண்டும். இத்தனைக்கும் இருவருக்கும் பெரிய பிரச்சனை எதுவும் கிடையாது. ஈகோதான்! இருவரையுமே காயப்படுத்தாமல் அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும்?
இப்படி, நாம் முடிக்கவேண்டிய டீல்கள் தினசரி வாழ்க்கையில் ஏராளம், ஏராளம்.
டீல்களை முடிக்கும் திறமை இருப்பவர்களைப் பார்த்து நாம் வியக்கிறோம், பொறாமைப்படுகிறோம். அது ஒரு திறமை என்பதை அங்கீகரிக்க மறுக்கிறோம். “அவன் ஜெகதலப்ரதாபன். எப்படியோ ஜெயிச்சிடறான்”, “பயலுக்குத் திறமை கம்மிதான். ஆனா, நல்லா சோப் போடுவான். ஆளுங்களைப் பேசிப் பேசி மயக்கிக் காரியம் சாதிச்சிடுவான்” என்றெல்லாம் நம் கையாலாகாத்தனத்துக்குக் கேடயம் தேடுகிறோம்.
டீல்களை முடிப்பது வேறும் பேச்சுத் திறமையல்ல: மனோதத்துவ அறிவு நிறைந்த கலை. இது சுலபமானதல்ல: அதே சமயம் ராக்கெட் சயின்ஸூம் அல்ல. தக்க வழிகாட்டி இருந்தால், எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடியது. Negotiation என்று இந்தத் துறைக்கு மேனேஜ்மென்டில் பெயர் வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்ட், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகங்கள் உலகின் நம்பர் 1, நம்பர் 2 என மேதைகளாலும் ஊடகங்களாலும் கணிக்கப்படுபவை. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் Program on Negotiation என்னும் தனித் துறையே இயங்கிவருகிறது. ஸ்டான்Lபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு வருடமும் Negotiation – இன் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள்.
மேனேஜ்மென்ட் ஆலோச கர்கள், பேராசிரியர்கள், அரசியல் நிபுணர்கள், ஆட்சியா ளர்கள், அரசு தூதர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்ற மாமேதைகள் வகுப்புகள் நடத்துகிறார்கள். ஏழு நாட்கள் பயிற்சி. பத்து வருடங்கள் மேனேஜர் அனுபவம் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பீஸ் எவ்வளவு தெரியுமா? 11,500 டாலர்கள் – ஆறு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய். அம்மாடியோவ்! ஆனால், பயிற்சி முகாமில் சேரப் போட்டா போட்டி. 40 பேரை மட்டும்தான் வடிகட்டி, வடிகட்டித் தேர்ந்தெடுக்கிறார்கள்.
திறமை எத்தனை அத்தியாவசியமானது என்ற உணர்வுதான், அனுபவசாலி சீனியர் மேனேஜர்களை இந்தப் பயிற் சிக்குக் காந்தமாய்க் கவர்ந்து இழுக்கிறது.
வெற்றியின் இந்த மந்திரச் சாவி, உங்கள் Negotiation திறமைகளைப் பட்டை தீட்டும் தொடர், இன்றுமுதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்கள் கைகளில்!
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago