புதுடெல்லி: உலகளவில் ஐடி துறையைச் சேர்ந்த அதிக சொத்து மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் (டிசிஎஸ்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தவிர முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த மேலும் நான்கு நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
இதுகுறித்து பிராண்ட் பைனான்ஸ் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிக மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில், இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.71 லட்சம் கோடியுடன் அசென்ஸா் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையில் மிகவும் வலுவான இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தை இந்தியாவின் டிசிஎஸ் நிறுவனம் பிடித்துள்ளது.
டிசிஎஸ் முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் மற்றும் 2020 ஐ விட 24 சதவீதம் அதிகரித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. டிசிஎஸ் பிராண்ட் மதிப்பு 16.8 பில்லியன் டாலர் ஆகும்.
அதிக மதிப்புமிக்க நிறுவன பட்டியலில், இன்போசிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்போசிஸ், கடந்த ஆண்டை விட 52 சதவீத பிராண்ட் மதிப்பு மற்றும் 2020 இல் 80 சதவீத வளர்ச்சியுடன் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஐடி சேவை வழங்கும் பிராண்டாக உருவெடுத்துள்ளது.
ஐபிஎம் நான்காவது இடத்தில் உள்ளது. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸைத் தொடர்ந்து டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் மேலும் நான்கு இந்திய நிறுவனங்கள் உள்ளன . விப்ரோ 7-வது இடத்திலும், ஹெச்சிஎல் எட்டாவது இடத்திலும், டெக் மஹிந்திரா 15-வது இடத்திலும், எல்டிஐ 22-வது இடத்திலும் உள்ளன.
2020 முதல் 2022 வரையிலான காலத்தில் இந்திய தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் சராசரி வளா்ச்சி விகிதம் 51 சதவீதமாக இருந்தது. அதேசமயம், அமெரிக்க பிராண்டுகளின் வளா்ச்சி 7 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago