புதுடெல்லி: மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜனவரி 2022-ல் மாநில அரசுகள் மொத்தம் ரூ.95,082 கோடியை பெற்றுள்ளன. வரிப்பகிர்வின் முன் தவணையாக மாநில அரசுகளுக்கு ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இது, ஜனவரி 2022 மாதத்திற்கு இன்று விடுவிக்கப்படும் வழக்கமான பகிர்வுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநில அரசுகள் இதுவரை மொத்தம் ரூ.95,082 கோடியை பெற்றுள்ளன, அல்லது 2022 ஜனவரி மாதத்திற்குரிய வரவுகளை விட இருமடங்கு அதிகமாகும்.
மாநில வாரியான நிதி பகிர்வு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாத தவணையாக 1939 கோடியே 19 லட்சம் ரூபாயும் முன் தவணையாக 1939 கோடியே 19 லட்சம் என மொத்தம் 3,878 கோடியே 38 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago