வட்டிக்கு வட்டி: 6 மாதங்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது.

வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறு, குறுந்தொழில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.

இந்தநிலையில் குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.973.74 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து சிறு கடன்தாரர்கள் மீண்டெழ உதவும் வகையில், அவர்கள் தவணை தவறிய கடன் சலுகையை பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் உதவும் விதமாக இந்த ஊக்கத்தொகை பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் இதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.973.74 கோடியிலிருந்து கீழ் காணும் கடன் பெற்றவர்கள் பயனடையத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ரூ.2 கோடி வரையிலான குறு,சிறு, நடுத்தர தொழில் கடன்கள்
ரூ.2 கோடி வரையிலான கல்விக் கடன்கள்
ரூ.2 கோடி வரையிலான வீட்டுவசதிக் கடன்
ரூ.2 கோடி வரையிலான நுகர்வோர் பயன்பாட்டு பொருள் கடன்
ரூ.2 கோடி வரையிலான கிரெடிட் கார்டு தவணைகள்
ரூ.2 கோடி வரையிலான வாகனக் கடன்கள்
ரூ.2 கோடி வரையிலான தனிநபர் கடன்கள்
ரூ.2 கோடி வரையிலான நுகர்வுக் கடன்கள்

பெற்றவர்கள் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்