ஜெய்பூரைச் சேர்ந்த டோகோஸ் நிறுவனம் டோகோஸ் எக்ஸ்1 என்ற ஸ்மார்ட் போனை ரூ.888-க்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இரண்டு சிம்கார்டு வசதியுடன் 4 அங்குல டிஸ்பிளே, 1ஜிபி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி (32 ஜிபி வரைக்கும் விரிவாக்கம் செய்யமுடிவது) ஆகியவை இதன் சிறப்பம்சம் என்று கூறப்படுகிறது.
டியூயல் கோர் புராசஸர், 2 மெகாபிக்செல் காமிரா, 0.3 மெகாபிக்செல் ஃபிரண்ட் காமிரா, 1,300 mAh பேட்டரியுடன் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நிறுவனத்தின் இணையதளத்தில் முன் கூட்டியே ஆர்டர் புக் செய்யலாம் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று புக்கிங் முடிவடைகிறது, மே 2-ம் தேதி முதல் டோகோஸ் எக்ஸ் 1 ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் போதே, நிறுவன இணையதளத்தின் பெரும்பாலான இணைப்புகளை திறக்க முடியவில்லை. குறிப்பாக நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய இணைப்பையும் திறக்க முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஃப்ரீடம் 251 என்ற மலிவு விலை ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்தக் குறைந்த விலைக்கு 3ஜி ஸ்மார்ட் போன் அளிக்க முடியாது என்று பலதரப்பிலும் சந்தேகங்கள் எழுந்த நிலையில் மத்திய அரசின் கவனத்துக்குச் சென்றது.
இதனையடுத்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தனது ‘பிசினஸ் மாடல்’ என்ன என்பதை விளக்குமாறு மத்திய அரசு கோரியிருந்தது.
இதனையடுத்து ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தற்போது ரூ.888-க்கு ஸ்மார்ட் போன் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
38 mins ago
வணிகம்
48 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago