நாடுமுழுவதும் வேலைவாய்ப்பு நிலவரம்: 9 துறைகளில்  3.1 கோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2021 செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ஒன்பது குறிப்பிட்ட துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்துள்ளது.

நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக இரண்டாம் காலாண்டுக்கான காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

விவசாயம் சாராத துறைகளில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் பெரும் பங்காற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கைகள் தொடர்ந்து வழங்குகின்றன.

உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகியவை இந்த ஒன்பது துறைகள் ஆகும்.

வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி வருவதுடன் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களின் விகிதம் 32.1 ஆக இருக்கிறது. காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையின் முதல் சுற்றில் இது 29.3% ஆக இருந்தது.

புபேந்தர் யாதவ்

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ஒன்பது குறிப்பிட்ட துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்தது. உற்பத்தி துறை முப்பத்தி ஒன்பது சதவீதத்திற்கு பங்களித்த நிலையில் கல்வித்துறை 22 சதவீதத்திற்கும், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம், பிபிஓ துறைகள் சுமார் 10 சதவீதத்திற்கும் பங்காற்றியுள்ளன.

வேலைவாய்ப்புகளின் தேவை மற்றும் விநியோக நிலவரம் குறித்த ஆய்வுகள் நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்