நவி மியூச்சுவல் பண்ட் அறிமுகப்படுத்தும் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் பண்ட்

By செய்திப்பிரிவு

மதுரை: நவி மியூச்சுவல் பண்ட் நிறுவனம் புதிதாக நவி நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் பண்ட் எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஓபன்- என்டட் அடிப்படையிலான முதலீட்டுத் திட்டமாகும். குறைந்த செலவில் பல்வேறு திட்டங்களில் குறிப்பாக15 பல்வேறு துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவி நிஃப்டி நெக்ஸ்ட் 50 பண்ட் திட்டமானது மற்ற எந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆகும் செலவில் மிகக் குறைவான செலவில் மேற்கொள்ளக் கூடிய திட்டமாகும். இப்புதிய என்எப்ஓ –வில் (புதிய ஃபண்ட் திட்டம்) இம்மாதம்15-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

நிஃப்டி நெக்ஸ்ட் 50 பண்ட் மூலம் திரட்டப்படும் நிதியானது நிஃப்டி சந்தையில் எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கும் 50 நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.

கூடுதல் அம்சமாக, நிஃப்டி நெக்ஸ்ட் 50 திட்டமானது முதலீட்டாளர்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு எதிர்காலத்தை உத்தேசித்து மேற்கொள்ளும் வர்த்தகம் போன்றது. இது வழக்கமாக நிதி சேவை அளிக்கும் நிறுவனங்களான (வழக்கமான வங்கிகளையும் தாண்டியது) குறிப்பாக சொத்து நிர்வாகம், கடன் அட்டை மற்றும் பொதுக் காப்பீடு ஆகிய நிறுவனங்கள் இப்போது சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

அதேபோல மருத்துவத் துறையிலும் அதாவது கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு அரசு அதிகம் செலவிடத் தொடங்கியதிலிருந்து இத்துறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

இத்தகைய வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு செய்வதால் சந்தையின் ஸ்திரமற்ற நிலையினால் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டும் வகையில் ஸ்திரமான வருமானத்தை ஈட்டித் தருவதாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்