ஸ்விக்கி, சொமேட்டோவில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிப்பு அமல்

By செய்திப்பிரிவு

ஸ்விக்கி, சொமேட்டோவில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் இதற்கு முன்னர் வரை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத உணவு வழங்கல் துறை தற்போது இந்த வரம்புக்குள் வந்துள்ளது. தற்போது வரை உணவகங்கள் தான் ஜிஎஸ்டியை வசூலித்து தாக்கல் செய்து வந்தன. இந்நிலையில் உணவு வழங்கல் நிறுவனங்களும் இனி 5% ஜிஎஸ்டியை விதிக்கும்.

எனவே இனி உணவுப் பொருட்களின் விலை ஸ்விக்கி, சொமேட்டோவில் ஆர்டர் செய்யும்போது இன்னும் 5% அதிகமாக இருக்கும்.
இனி ஓலா, உபெபர் ஆகிய பிக் அப் டிராப் வாகன டாக்ஸி சேவைகளிலும் கூடுதலாக 5% ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஓலா, உபெர் மூலம் கார், பைக் புக் செய்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்காலிகமாக தப்பித்த ஜவுளித் துறை: ஜனவரி 1 முதல் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் என முன்னதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் ஜவுளித்துறையினருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்த முடிவு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி ஏற்றம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்