புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு,குறு, நிறுவன தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது
2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட்டுக்கு முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
» இந்தியாவில் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அன்றாட கரோனா தொற்று 16,764; உயிரிழப்பு 220
» காலிஸ்தான் ஆதரவுக் குழுக்களால் அச்சுறுத்தல்: மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜிஎஸ்டி வரி முறையில் 12 சதவீத பிரிவையும் 18 சதவீத பிரிவையும் ஒன்றாக இணைக்க கோரிக்கைகள் வந்துள்ளன. அதேபோல, சில பொருட்களுக்கான வரிகளைக் குறைக்கவும் கோரிக்கை உள்ளது.
இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இன்றையக் கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்து வருகிறது. ஜவுளிகளுக்கான வரி உயர்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
சிறு குறு நிறுவனங்களைப் பாதிக்கும் அளவுக்கு வரி உயர்வு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில், வரிக் குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago