முன்னணி டிஜிட்டல் நிதி சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் இன்று பட்டியலிடப்பட்ட அன்றே சரிவு கண்டால் இதனை நேரில் பார்த்த நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கண்ணீர் விட்டு அழுதார்.
டிஜிட்டல் நிதி சேவையில் முன்னணி நிறுவனமாக பேடிஎம் திகழ்கிறது. ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் சேவையில் பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் இந்நிறுவனத்தை
தொடங்கியவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா
ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் சேவையில் பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. டிஜிட்டல் சேவையில் முன்னணி நிறுவனமாக பேடிஎம் திகழ்கிறது. இந்நிறுவனத்தை தொடங்கியவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா புது புது நிதி சேர்ந்த சேவைகளை வழங்கி பேடிஎம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பங்கு வெளியிட்டது.
பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் திரட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ம் தேதி அன்று முடிவடைந்தது. இதன் பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 15, 2021 அன்று செய்யப்பட்டது. இன்று பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன.
பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது.
மும்பை பங்குச்சந்தையில் 1955 ரூபாயாக தொடங்கியது. இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07 சதவீதம் அளவில் சரிவு காணப்பட்டது. பின்னர் மேலும் சரிந்து 1806.65 ரூபாயாக காணப்பட்டது.
இதேபோன்று தேசிய பங்குசந்தையில் இந்த பங்குகள் நிர்ணயவிலையை விடவும் 15.97 சதவீதம் சரிவினைக் கண்டது. ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை பங்குகள் சரிந்தன. இதனால் பேடிஎம் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கலந்து கொண்டார். மும்பை பங்குச்சந்தை கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசத் தொடங்கினார்.
அப்போது பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதிரடியாக சரிவு கண்டதால் அவர் கண்ணீர் விட்டார். கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் தனது கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டார். இதனால் அங்கிருந்த அனைவரும் சோகத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
15 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago