‘தீபாவளி ஆபர்’ -  பிஎஸ்என்எல் சலுகை திட்டம்  அறிமுகம் 

By செய்திப்பிரிவு

தீபாவளியொட்டி சென்னையில் பிஎஸ்என்எல் பல்வேறு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

வீட்டு ஃபைபர் இணைப்பு (எஃப்டிடிஎச்) பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 01-11-2021 முதல் 90 நாட்களுக்கு அனைத்து ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களிலும் முதல் மாத கட்டணத்தில் ரூ.500/- வரை 90% தள்ளுபடி சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் லேண்ட்லைனுக்கு ரூ.250/- மற்றும் எஃப்டிடிஎச்-க்கு ரூ.500/- எனும் நிறுவுதல் கட்டண தள்ளுபடியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிஎஸ்என்எல் நீட்டித்துள்ளது.

ஜிஎஸ்எம் மொபைல் சேவைகளின் கீழ், தீபாவளி மற்றும் வரவிருக்கும் பண்டிகை நாட்களைக் கருத்தில் கொண்டு, பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி கீழ்காணும் சலுகைகளை வழங்குகிறது:

* டிசம்பர் 2021 வரை அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் இலவச சிம்.

* புதிய முதல் ரீசார்ஜ் வவுச்சர் எம்ஆர்பி 48, அன்லிமிடெட் இலவச குரல் அழைப்புகள், 50 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டாவுடன் 15 நாட்கள் செல்லுபடியாகும். (31.12.2021 வரையிலான விளம்பரச் சலுகை).

* 26.12.2021 வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாப் அப் எம்ஆர்பி ரூ.110-ல் முழு டாக்டைம் சலுகை.

* பெருந்தொற்றுக்கு பின் அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களும் இப்போது அனைத்து வசதிகளுடன் "ஒன் ஸ்டாப் ஷாப்" என்ற முறையில் அனைத்து தொலைத்தொடர்பு தேவைகளுக்கும் (லேண்ட்லைன்/பிராட்பேண்ட்/எஃப்டிடிஹெச்/மொபைல்) ஆதார் வசதிகளுடன் முழுமையாகச் செயல்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்,

அருகிலுள்ள சேவை மையங்களுக்கு சலுகையைப் பெற விரைந்து செல்லவும் அல்லது 1800-345-1500 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும், என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் துணை பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) மிஹாவாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்