செயில் பங்கு விற்பனை: மத்திய அரசு தீவிரம்

By செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக் கையை மத்திய அரசு துரிதப் படுத்தியிருக்கிறது.

இதற்கான பங்கு விலக்கல் அமைச்சகம் உருக்குத்துறை அமைச்சகம் மெர்ச்சண்ட் வங்கி யாளர்களை திங்கட்கிழமை சந்தித்து பேசியது. இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான் என்றும் பங்குகளை விலகிக்கொள்ள எந்தவிதமான காலக்கெடுவும் நிர்ணயம் செய்யவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சந்தை மதிப்பில் ஐந்து சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு 1,900 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு செயில் நிறுவனத்தில் 80 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. கடந்த வாரம் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் (செபி) பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறியது. இப்போது 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் செபியின் விதிமுறை படி செயல்பட முடியும்.

2012-13ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் 10.82 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் கடந்த 2013 மார்ச் மாதம் 5.82 சதவீத பங்குகளை மட்டும் விற்று 1,500 கோடி ரூபாய் திரட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

44 mins ago

வணிகம்

54 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்