மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 62 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பத்திரம் வாங்குவதையும் குறைக்கலாம் என்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. மேலும் இந்திய பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் சாதமாக வந்து கொண்டுள்ளன. இதனால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றம் கண்டு வருகின்றன.
சாதகமான உலகளாவிய வர்த்தக சூழலால் பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை எட்டியது. காலை 9:18 மணிக்கு, பிஎஸ்இ சென்செக்ஸ் 62,060, 320 புள்ளிகள் அல்லது 0.51 சதவிகிதம் அதிகமாகவும், என்எஸ்இ நிஃப்டி 89 புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் உயர்ந்து 18,568.75 ஆகவும் இருந்தது.
» இரு மாதங்களில் 2-வது மூடல்: ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை மூடுகிறது ரயில்வே துறை
» இடுக்கி அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு: கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 0.9 சதவிகிதம் உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று நண்பகலில் 400புள்ளிகள் வரை உயர்ந்து 62,159 ஆக உள்ளது. நிப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 18582 புள்ளிகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago